www.garudabazaar.com

கோபிக்கு ஆப்பா? கெஸ்ட் ரோலில் யாரு பாருங்க! பாக்கியலட்சுமி 3 மணி நேர விறுவிறு எபிசோட்! எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்டில் இருக்கும் பெண்களின் திறமைகளை கொஞ்சமாவது வளர்க்க வேண்டும்,யார் அவர்களை மட்டம் தட்டி பேசினாலும் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் கை கொடுத்தால் முன்னுக்கு வர அதுவே உறுதுணையாக இருக்கும் என்று புரிய வைக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.

baakiyalakshmi 3 hours episode ranjith priyaraman cameo

ஒரு இல்லத்தரசியின் கதை என்கிற டேக்லைனுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், வீட்டில் இருக்கும் அனைவரும் பாக்கியாவை பார்த்து நக்கலடிக்க, மாமனார், முதல் மருமகள், இரண்டாவது மகன் மட்டுமே அவரை ஊக்கப்படுத்துகின்றனர்.

தனது சொந்த தொழிலில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் பாக்கியாவின் கணவர் கோபி, தனது பிசினஸ் முழுவதையும் மூடிவிடலாமா என்கிற யோசனையில் இருக்கிறார். ஆனால் அனைவரின் கிண்டல் கேலிகளை  தாங்கி கொள்ளும் பாக்கியா, படிப்படியாக முன்னேறி தனி இடம் பார்த்து தனது சொந்த தொழிலில் வளர்ச்சி அடைகிறார்.

பாக்கியாவின் பிசினஸ் சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவ பல ஆர்டர்கள் வருகின்றன. அவை அனைத்தையும் தயார் செய்ய தனி இடம் பார்ப்பது என்று  தனது முழு உதவியை செய்கிறார் பாக்கியாவின் மாமனார். இதற்கென கடை திறப்பு விழாவிற்கு  சிறப்பு விருந்தினர்களாக ரஞ்சித் மற்றும் பிரியராமனை  ஏற்பாடு செய்கிறார் எழில்.

இதனை அடுத்து கடை திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்து காத்து கொண்டு இருக்க, சிறப்பு விருந்தினர்கள் மட்டும் வராமல் இருப்பதை கண்டு மிகவும் பதட்டமாக இருக்கிறார் பாக்கியா.  ராதிகா, கோபி, பாக்கியா என்று அனைவரும் டென்ஷனாக இருக்க ப்ரோமோவை முடிக்கின்றனர்.

இந்த எபிசோட் வழக்கமான அரை மணி நேரமாக இல்லாமல், வரும் சனிக்கிழமை அன்று 3 மணி நேரமாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து,, பாக்கியாவுடன் கோபியை சந்திப்பாரா ராதிகா என்று ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சனிக்கிழமை எபிசோடில் என்ன நடக்கின்றது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi 3 hours episode ranjith priyaraman cameo

People looking for online information on Baakiyalakshmi, StarVijay, TVSerial, Vijay tv will find this news story useful.