www.garudabazaar.com

"அறைஞ்சுருவேன்" .. "அடிக்குற வேல வெச்சுக்காத" வெடித்த பாலாஜி - நிரூப் சண்டை.. BB Ultimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

Balaji and niroop fight in biggboss ultimate housemates tensed

BB Ultimate : "சிம்புவுக்கு பிக்பாஸ் பழக்கம் இல்ல.. அவருக்கு புரியாது.." அனிதா பரபரப்பு கருத்து.

இதில் சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் அபார வெற்றியால், தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

வைல்டு கார்டு என்ட்ரி

கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் பட்டியலில் இருந்து, நபர்களைத் தேர்வு செய்து இந்த அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி, KPY சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர், வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்தனர். மேலும், கமலுக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.

பஞ்சமே இல்லை

தற்போதுள்ள போட்டியாளர்களில் சிலர், ஏற்கனவே முந்தைய சீசன்களில் ஒன்றாக கலந்து கொண்டவர்களும் உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்து கொண்ட பிறகும், மற்ற பிக்பாஸ் சீசன்களை போல, இதிலும் அடிதடி, சண்டை, பரபரப்பு உள்ளிட்ட எதற்கும் பஞ்சமே இல்லை.

Balaji and niroop fight in biggboss ultimate housemates tensed

செம சண்டை

இன்னொரு பக்கம், 24 மணி நேரமும் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதால், தினந்தோறும் போட்டியாளர்கள் இடையே நடைபெறும் வாக்குவாதங்கள் என பல விஷயங்கள், டிரெண்டிங்கில் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Balaji and niroop fight in biggboss ultimate housemates tensed

புதிய டாஸ்க் ஒன்றின் போது, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கோழி மற்றும் சேவல் போன்றவற்றின் உடையில் உள்ளனர். இந்நிலையில், இந்த டாஸ்க்கின் போது, பாலாஜி மற்றும் நிரூப் ஆகியோர் திடீரென மோதிக் கொண்டனர்.

உன்ன அறைஞ்சுருவேன்

டாஸ்க் நடுவே பாலாஜியின் செயலால் ஆத்திரம் அடைந்த நிரூப், "இப்டி பண்ணா அறைஞ்சுருவேன் உன்ன. உன்ன அறைய ஒரு நிமிஷம் ஆகாது" என ஆத்திரத்தின் உச்சத்தில் பேசினார். இதனைக் கேட்ட பாலாஜி, "அடிரா, அடிரா" என்றபடி, நிரூப் அருகே கோபட்டதுடன் செல்கிறார்.

Balaji and niroop fight in biggboss ultimate housemates tensed

இதனைக் கண்ட சக போட்டியாளர்கள், பதற்றம் அடைய, உடனடியாக பாலாஜி மற்றும் நிரூப் ஆகியோர் அருகே வந்து, அவர்களை சமரசம் செய்ய பார்க்கின்றனர். இதனிடையே, இருவரும் மாறி மாறி, கத்திக் கொண்டே இருக்கின்றனர்.

பாக்கியா தாலி எடுத்து குடுப்பாளா??. ராதிகாவின் அலப்பறையால் விழி பிதுங்கிய கோபி..

"அறைஞ்சுருவேன்" .. "அடிக்குற வேல வெச்சுக்காத" வெடித்த பாலாஜி - நிரூப் சண்டை.. BB ULTIMATE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Balaji and niroop fight in biggboss ultimate housemates tensed

People looking for online information on Balaji, BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Niroop, Vijay tv will find this news story useful.