Rocketry
www.garudabazaar.com

Baakiyalakshmi : மருத்துவமனையில்.. கோபி கையை பிடித்தபடி இருந்த ராதிகா.. இடிந்து போய் நின்ற பாக்கியா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் சிறந்த தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி, தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi latest promo radhika with gopi and baakiya broken

ஒவ்வொரு எபிசோடுகளும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டே போகும் நிலையில், இத்தனை நாட்கள் கோபி போட்டு வந்த நாடகம் கடைசி கட்டத்திற்கு வந்ததை போன்ற காட்சி ஒன்று வெளியாக இன்னும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

பாக்கியா மற்றும் ராதிகா இடையே நீண்ட நாட்களாக பல நாடகங்கள் போட்டு வந்த கோபியின் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

முடிவுக்கு வரும் கோபியின் நாடகம்

தனது தோழியின் கணவராக இருந்து விட்டு, தன்னை அடைய கோபி திட்டம் போடுகிறார் என்ற விஷயம் ராதிகாவுக்கு முதலில் தெரிய வந்தது. இதனால், அவரை ராதிகா ஒதுக்க ஆரம்பிக்கவே, கோபியோ நீ தான் வேண்டும் என ராதிகாவை பிரிய மறுக்கிறார். இதனைத் தொடர்ந்து, ராதிகாவின் கணவரும் கோபி வீட்டிற்கு வந்து பிரச்சனைகளை உண்டு பண்ண, கோபியின் வீட்டாருக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வருகிறது.

Baakiyalakshmi latest promo radhika with gopi and baakiya broken

தொடர்ந்து, கோபியின் தாயாரும் உடனடியாக மகனை வீட்டிற்கு அழைக்க, ஒரு மாதிரி குழப்பத்தில் கார் ஓட்டிக் கொண்டு வரும் கோபி, விபத்து ஒன்றில் சிக்கி விடுகிறார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, அவரைக் காண பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், இந்த முறை நிச்சயம் கணவர் கோபி குறித்த உண்மை முகம் பாக்கியாவுக்கு தெரிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவே, அடுத்து நடந்த சம்பவம் ஒன்று, பெரிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi latest promo radhika with gopi and baakiya broken

பாக்கியாவுக்கும் தெரிஞ்ச உண்மை??

பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரும், மருத்துவமனையில் நிற்க, கோபியின் மனைவியை நர்ஸ் அழைக்கிறார். அப்போது, ராதிகா போய் கையெழுத்து போடுவதை பார்க்கும் பாக்கியா, பேயறைந்தது போல நிற்கிறார். அது மட்டுமில்லாமல், கோபி அருகே சென்று ராதிகா பேசிக் கொண்டிருக்க, உள்ளே செல்லும் பாக்கியா, கோபி சொல்வதைக் கேட்டு, இன்னும் அதிர்ந்து போகிறார்.

Baakiyalakshmi latest promo radhika with gopi and baakiya broken

ராதிகாவின் கையை பிடித்த படி, "போறேன்னு மட்டும் சொல்லாத. நீ இல்லன்னா நான் செத்துருவேன்" என கோபி சொல்கிறார். இதனைக் கேட்டதும் கண்ணீருடன் இடிந்து போய் பாக்கியா நிற்க, இனி பாக்கியலட்சுமி தொடரில் என்ன மாதிரியான அதிரடி திருப்பங்கள் நிகழும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi latest promo radhika with gopi and baakiya broken

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Baakiyalakshmi Promo, Gopi, Radhika will find this news story useful.