Rocketry
www.garudabazaar.com

"44 வயசுல comeback-ஆ? சித்தியா தான் நடிக்கணும்.." நடிகை பூஜா தெறி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்பட துறையில் அஜித், மாதவன், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை பூஜா.

Actress pooja tweet about her comeback in cinema gone viral

ஜே ஜே, ஜித்தன், அட்டகாசம் உள்ளிட்ட பூஜா நடித்த பல படங்கள், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, இயக்குனர் பாலா இயக்கத்தில் பூஜா நடித்த 'நான் கடவுள்' திரைப்படத்தில், அவருடைய கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது

இன்னமும் பூஜா நடித்த படங்கள், பலருக்கு விருப்ப படங்களாக இருப்பதைக் காண முடியும். திரையில் நடிப்பதை தவிர்த்து, பெரிதாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத நடிகை பூஜா, தற்போது ட்விட்டரில் அவருடைய ரசிகர்களிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஒரு காலத்துல..

"ஒரு காலத்தில் பூஜா ஒரு லிவ்டு கோஸ்ட் ஆக இருந்தார்" என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட, அந்த பதிவில் பூஜாவின் சில பழைய புகைப்படங்களும் உடன் இருந்தன. இந்த புகைப்படங்களையும், இந்த பதிவையும் பார்த்த பூஜா, நெகழ்ச்சி அடைந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் மட்டுமில்லாமல், அந்த ரசிகருக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் ரசிகர் ஒருவர், பூஜாவிடம், "நீங்கள் கம்பேக் கொடுக்கலாம்ல?" என்று கேட்கிறார். அதற்கு பூஜா எதார்த்தமாகவும், விளையாட்டுத்தனமாகவும் ஒரு இயல்பான பதிலை கொடுத்திருக்கிறார். அது தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இனிமே Comeback குடுக்குறதுன்னா..

அதில், "எனக்கு 44 வயது ஆகிவிட்டது  இனியும் கம்பேக் கொடுப்பது என்றால் சித்தி கதாபாத்திரம் தான் பண்ணனும்" என ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார்.

பூஜாவின் இந்த பதில் பதிவு, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. ரசிகர்களிடம் இப்படி எதார்த்தமாகவும், இயல்பாகவும் பேசும் இப்படி ஒரு நடிகையை இப்போது மிஸ் பண்ணுகிறோமே.. என்று பலரும் கமெண்ட்டுகளில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Actress pooja tweet about her comeback in cinema gone viral

People looking for online information on Comeback, Naan Kadavul, Pooja Umashankar, Viral Reply will find this news story useful.