Rocketry
www.garudabazaar.com

ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய பின் முதல் ஃபோட்டோ.. வைரலாகும் விக்னேஷ் சிவன் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேனிலவுக்கு பின் முதல்முறையாக விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Vignesh Shivan Nayanthara First Photo After Honey Moon

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்விற்கு இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்தார். இந்த  வீடியோக்கள் & புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றன.

Vignesh Shivan Nayanthara First Photo After Honey Moon

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார்.  இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகின.

Vignesh Shivan Nayanthara First Photo After Honey Moon

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு "நினைச்சா தோனும் இடமே" என தலைப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara First Photo After Honey Moon

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.