அடல்ட் குரூப்பில் பகிரப்பட்ட நடிகையின் நம்பர் - வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு கண்டனம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை காயத்ரி சாய் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அவர் தற்போது தனக்கு நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது தொலைபேசி எண் அடல்ட் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் ''பீட்சா டெலிவரி செய்ய கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஒருவர் வந்தார். அவர் என் எண்ணை அடல்ட் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து எனக்கு அதிக கால்கள் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ் வந்ததது''. என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு வாட்ஸ் அப் மெசேஜை ஸ்கிரீன் ஷாட்டுடன் பகிர்ந்தார். அந்த ட்வீட்டில் பீட்சா நிறுவனத்தையும், தமிழ்நாடு போலீஸின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.
.@dominos_india this is how he spread it through Whatsapp @TNPOLICE_HQ please help pic.twitter.com/xePh7QsiGo
— Gayatri Sai (@gainsai) February 26, 2020
@dominos_india guy delivered pizza at my place in Chennai in a intoxicated state on the 9th of feb and shared my number in adult groups and a complaint is pending since ur office is yet to speak to me . I have numerous calls and WhatsApp which he has shared .please be safe all pic.twitter.com/CehVmWwBkL
— Gayatri Sai (@gainsai) February 26, 2020