www.garudabazaar.com
iTechUS

"இந்த Show பாத்து என் மகன் வளரணும்ன்னு அவசியமே இல்ல".. திடீர்ன்னு கொந்தளிச்ச அசிம்.. என்னாச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

Azeem reply to cirticism based on his anger with son

Image Credit : Vijay Television

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும்.

அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும் தன் மீதான விமர்சனங்களுக்கான விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தனது மகன் குறித்து அசிம் பேசியுள்ள விஷயம், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Azeem reply to cirticism based on his anger with son

Image Credit : Vijay Television

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே தனது மகன் குறித்து நிறைய உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார் அசிம். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அசிம் பகிர்ந்திருந்தார். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் அசிம் அதிகம் கோபப்பட்டதால் அவருடைய மகனுக்கு தப்பான முன்னுதாரணமாக அவர் இருக்கக்கூடும் என்ற கருத்து ஒன்று பரவலாக இருந்தது.

இது பற்றி தற்போது மகன் குறித்த மீம் ஒன்றை பார்த்த போது விளக்கம் கொடுத்த அசிம், "எனக்கு என் பையன் தான் எல்லாமே. அது உண்மைதான். இந்த ஷோல இப்படி கோபப்படுறீங்களே, இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு. அடேய், என் மகன் கூட டைம் Spend பண்ண எனக்கு பல்லாயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோவ பாத்து தான் என் பையன் வளரணும்னு அவசியமே கிடையாது.

Azeem reply to cirticism based on his anger with son

Image Credit : Vijay Television

நான் அப்படி ஒண்ணும் சொசைட்டிக்கு தப்பா பேசல. சொசைட்டிக்கு தப்பா பேசினவங்க எல்லாம் ஜாலியா போயிட்டு இருக்காங்க. அதனால சொசைட்டிக்கு யாரு தப்பா பேசினாங்கன்னு தெரியும். என் கோபம் தான் உள்ள இருந்துச்சே தவிர காழ்ப்புணர்ச்சி காரணமா யாரையும் நான் எதுவும் பேசல. அதனால என் மகன் இந்த சமுதாயத்தில் வளர்வதற்கு எந்த வகையிலும் இந்த ஷோ பார்த்து வளரமாட்டான்" என அசிம் குறிப்பிட்டார்.

"இந்த SHOW பாத்து என் மகன் வளரணும்ன்னு அவசியமே இல்ல".. திடீர்ன்னு கொந்தளிச்ச அசிம்.. என்னாச்சு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem reply to cirticism based on his anger with son

People looking for online information on Azeem, Bigg boss will find this news story useful.