www.garudabazaar.com

"கமல் சார் இத தான் சொல்லுவாரு".. வார இறுதியில் நடக்க போவதை முன்பே கணித்த Azeem.. சம்பவம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Azeem say what kamalhaasan will speak about bigg boss

Also Read | அசீம்கிட்ட இருக்குற பிரச்சனை, Title Winner வாய்ப்பு யாருக்கு?.. குயின்சி ஷேரிங்ஸ்.. ஒருவேளை இருக்குமோ?

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் கூட நிறைய கலவரங்கள் வெடித்திருந்தது.

அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது, பழங்குடி அணிக்குள்ளேயே உருவான சண்டை சச்சரவுகள், இரவில் பூ திருடியதாக அசீம் மீது எழுந்த குற்றச்சாட்டு என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. அதே போல, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக, போட்டியாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் கமல்ஹாசன் கூறி இருந்தார்.

Azeem say what kamalhaasan will speak about bigg boss

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

மேலும், இதில் சிவாஜி கணேசனின் வக்கீல் கதாபாத்திரத்தில் அசீமும், வடிவேலுவின் கான்டராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் தனலட்சுமியும், மன்மதன் சிம்புவாக ஆயிஷாவும், அந்நியன் விக்ரமாக விக்ரமனும், முதல்வன் ரகுவரன் கதாபாத்திரத்தில் ராமும், நாய் சேகர் வடிவேலுவாக மைனா நந்தினியும் என ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சினிமா கதாபாத்திரங்கள் போல பிக்பாஸ் வீட்டில் உலா வருகின்றனர்.

Azeem say what kamalhaasan will speak about bigg boss

முந்தைய வாரங்களில் உள்ளது போல இந்த வாரம் அதிக சண்டை மற்றும் சச்சரவுகள் இல்லாமல் வேடிக்கை நிறைந்து ஜாலியான எபிசோடுகளாக தான் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கிறது. பெரிய அளவில் எந்த போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை போடவும் இல்லை.

அப்படி இருக்கையில், இந்த வார இறுதியில் கமல்ஹாசன் என்ன சொல்வார் என்பதே முன் கூட்டியே கணித்து அசீம் சொன்ன விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

சக போட்டியாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் அசீம், தனது சிவாஜி கணேசன் கதாபாத்திர குரலிலேயே, "கமல் சார் சொல்லுவாரு பாருங்க. இந்த வாரம் ரொம்ப போரா இருந்துச்சு. ஒண்ணுமே இல்ல அப்படின்னு" என தெரிவிக்கிறார். நீதிமன்ற டாஸ்க்கில் கூட சில போட்டியாளர்கள் Safe ஆக விளையாடி இருந்தார்கள் என்றும் இப்படியே போனால் இது போரிங் சீசனாக மாறும் என்றும் கமல்ஹாசன் கூறி இருந்தார். அதே போல, இந்த வாரமும் பெரிய அளவில் சண்டைகள் இல்லாமல் போவதால் அசீம் கூறியது போலவே கமல்ஹாசன் பேசுவாரா என்பது பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "அவரு தான் காதல் பிசாசு.. பொண்ணு லவ் பண்ணல, அப்பாவுக்கு லவ் வந்துருச்சு 😅".. குயின்சி Exclusive!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem say what kamalhaasan will speak about bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay Television, Vijay tv will find this news story useful.