www.garudabazaar.com
iTechUS

ராபர்ட் -க்காக பேசப் போன விக்ரமன்.. ஆவேசத்தில் அசிம் விட்ட வார்த்தை!!! Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது.

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே, அசிம் தற்போது டாஸ்க்கை மீறி, யாருக்கும் தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டதாக போட்டியாளர்கள் குறிப்பிட்டனர். அதாவது பாத்ரூமில் அசிமுடைய Foundation இருந்ததாக தெரிய, அதனை அவர் தான் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தி இருப்பார் என்றும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் தெரிவிக்கின்றனர்.

இதற்கு நடுவே ராபர்ட் மாஸ்டர் மேக்கப் போட்டதாக அசிமை குறிப்பிட, அவரிடம் ரச்சிதா பெயரை பயன்படுத்தி ஆவேசம் அடையவும் செய்கிறார் அசிம். தேவை இல்லாமல் ரச்சிதா பெயரை பயன்படுத்தியதால் அசிம் மீது ராபர்ட் மாஸ்டரும் கோபம் அடைகிறார். இப்படியாக இந்த விவாதம் போக, பெரிய அளவில் சலசலப்பையும் அங்கே உண்டு பண்ணி இருந்தது.

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

இதனைத் தொடர்ந்து Sacrifice டாஸ்க் தொடர விருப்பம் இருந்தால் தொடரலாம் என்றும் இல்லை என்றால் பாதியிலேயே விட்டுவிட்டு விடலாம் என்றும் பிக் பாஸ் கூறுகிறார். அப்படி இருக்கையில், ராபர்ட்டுக்கு ஆதரவாக அசிமிடம் பேசும் விக்ரமன், "உங்க வேலைய நீங்க பாக்கல, அத பாக்க தான் அவரு (ராபர்ட்) சொன்னாரு" என தெரிவித்தார். இதற்கு மேல் தொடர வேண்டும் என்பது உங்களின் விருப்பம் என பிக் பாஸ் கூறியதை குறிப்பிட்டு பேசும் அசிம், "நீங்க எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க?" என விக்ரமனை பார்த்து கேட்கிறார்.

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

இதற்கடுத்து அதை கொஞ்சம் அமைதியாகவும் கூறலாம் என விக்ரமன் அசிமிடம் அறிவுறுத்த, "உண்மைய சொல்லவா விக்ரமன். உங்களோட பாணி வேற என்னோட பாணி வேற. தயவு செஞ்சு என்னோட விஷயத்துல தலையிடாதீங்க. உங்களோட வேலைய பாருங்க விக்ரமன். மக்கள் பாக்குறாங்க மக்கள் பாக்குறாங்கன்னு ஒரு லட்சம் தடவை சொல்லிட்டீங்க. இதுல எல்லாம் வராதீங்க. அவங்க வேலைய அவங்க பார்த்தா எல்லாருக்கும் நல்லது" என அசிம் கூற, தொடர்ந்து விக்ரமன் மற்றும் அசிம் இடையே விவாதம் வளர்ந்து கொண்டே போகிறது.

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

இறுதியில், "நீங்க கேட்டா பதிலே சொல்ல முடியாது விக்ரமன். இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா நான் உங்கள மதிக்கவே மாட்டேன் விக்ரமன்" என அசிம் கூற, "சொல்றதும் சொல்லாம இருக்குறதும் உங்க விருப்பம்னா, விடாம கேக்குறது என்னோட விருப்பம்" என விக்ரமனும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Vikraman argument for sacrifice task bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Vikraman will find this news story useful.