www.garudabazaar.com
iTechUS

விக்ரமனுக்கு பறந்த மெசேஜ்.. அடுத்த கணமே செஞ்ச நெகிழ்ச்சி காரியம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர்.

Vikraman surprise visit to his supporter video viral

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | KGF யாஷ் கொடுத்த விருந்து.. நெகிழ்ந்துபோன துல்கர் சல்மானின் வைரல் போஸ்ட்..!

ஆரம்பத்தில் இருந்தே அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாக சென்றதால், பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ரசித்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்து வந்தனர்.

அதே போல, பல போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகி இருந்தனர். இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட Finale சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இந்த 3 பேருக்குமே நிறைய ரசிகர்கள் ஆதரவு இருந்ததால் கடைசி வரை யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.

Vikraman surprise visit to his supporter video viral

Image Credit : Vijay Television

இறுதியில், அசிம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என அவரது கையை உயர்த்தி கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், 3 ஆவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் பெரிய அளவில் பரவலாகவும் இருந்து வருகிறது.

அதே போல, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் தங்களின் அனுபவம் பற்றியும் பொது வெளியில் பேசி வருகின்றனர். இந்த நிலையில், தனது ஆதரவாளர் ஒருவரை விக்ரமன் நேரில் சந்தித்தது குறித்த செய்தி, அதிகம் வைரலாகி வருகிறது.

Vikraman surprise visit to his supporter video viral

Images are subject to © copyright to their respective owners.

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பயின்று வருகிறார் பவுலின் என்ற மாணவி. செவி மற்றும் பேச்சு மாற்றுத் திறனாளியான இவர் விக்ரமனின் ஆதரவாளராக இருந்து வருகிறார். இதனிடையே, விக்ரமனை நேரில் சந்திக்க வேண்டும் என குறுஞ்செய்தி ஒன்றை அவர் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, பவுலினின் விருப்பத்திற்கு ஏற்ப, வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார் விக்ரமன். பின்னர், அவரது துறையில் வெற்றி பெறவும் விக்ரமன் வாழ்த்தி உள்ள நிலையில், விக்ரமன் வருகையால் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போயுள்ளார் மாணவி பவுலின்.

Also Read | குழந்தை பிறப்புக்கு அட்லி & பிரியாவை வாழ்த்திய கீர்த்தி & சமந்தா.. என்ன சொல்லிருக்காங்க 😍

விக்ரமனுக்கு பறந்த மெசேஜ்.. அடுத்த கணமே செஞ்ச நெகிழ்ச்சி காரியம்.. வீடியோ

Tags : Vikraman

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman surprise visit to his supporter video viral

People looking for online information on Vikraman will find this news story useful.