www.garudabazaar.com

BiggBoss 6 Tamil : "கொலை கூட பண்ணுங்க." ஷெரினா விசயத்தில் எரிமலையாக வெடித்த ஆயிஷா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசன், அடுத்தடுத்து பல விறுவிறுப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ayesha get angry with biggboss housemates for sherina

இதன் காரணமாக, மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு மத்தியில், மாறி மாறி சில போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்ததும் சமீபத்திய எபிசோடுகளில் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது. சமீபத்தில், வார இறுதி எபிசோடில் வந்த கமல், போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, சச்சரவுகள் குறித்தும் அவர்களிடம் நேரடியாக பேசி இருந்தார்.

இதற்கு மத்தியில், முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து வாடுவதால், அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி செயல்பட்டிருந்தார். அதே போல, சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

ayesha get angry with biggboss housemates for sherina

இதற்கு முன்பாகவே பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்திருந்தது. அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக அடிக்கடி சண்டை மட்டும் தான் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக நடந்து கொண்டே இருக்கிறது.

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டி நடைபெறுவதாக தெரிகிறது. அப்படி இருக்கையில், பலரும் மாறி மாறி இதில் மோதிக் கொள்ளவும் செய்கின்றனர். இதனிடையே,  போட்டியாளர்கள் நெரித்ததால் சிக்கிக் கொண்ட ஷெரினா, நிலைத் தவறி கீழே விழுகிறார். இதனால், அவரது தலையிலும் அடிபடுவதாக தெரிகிறது.

ayesha get angry with biggboss housemates for sherina

இதன் காரணமாக, சக போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி இருந்தது. சில போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்த நிலையில், ஷெரினா விஷயத்தில் ஆயிஷா கோபத்துடன் சொன்ன கருத்து கடும் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி உள்ளது.

போட்டியாளர்களை பார்த்து கோபத்துடன் பேசும் ஆயிஷா, ஷெரினா காயத்துடன் படுத்து கொண்டிருந்த போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை என்றும் யாரவது அவரிடம் போய் நலம் விசாரித்தீர்களா என்பதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கிறார். மேலும், கேம் ஆடுங்கள், தள்ளி விடுங்கள், கொலை செய்யுங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள் என்றும் கூறுகிறார்.

ayesha get angry with biggboss housemates for sherina

பொம்மை டாஸ்க் மூலம் தொடர்ந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் சண்டை அரங்கேறி வருவது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ayesha get angry with biggboss housemates for sherina

People looking for online information on Ayesha, BB6 Tamil, Biggboss 6 Tamil, Sherina will find this news story useful.