செருப்பை கழட்டுற அளவுக்கு போன Ayesha Vs Azeem சண்டை.. Hug பண்ணி சமாதானம் ஆனது எப்படி?
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுத்தன.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் Ranking Task-ல் சிறைக்கு போகக்கூடிய போட்டியாளரை மற்றவர்கள் நாமினேட் செய்ய வேண்டும். இது குறித்த டாஸ்கில், போட்டியாளர் விக்ரமனை வேலை செய்யவில்லை என அசீம் சொன்னதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், ஆயிஷாவுக்கு தகுதியே இல்லை என சொன்னதால், அசீமுக்கும் ஆயிஷாவுக்கும் வாக்குவாதம் நீடித்தது. அப்போது ஆயிஷாவை வாடி போடி என அசீம் பேசியதும், அசீமை நோக்கி அயிஷா செருப்பை எடுத்ததும் நடந்தது.
ஆனால் அதன் பிறகு ரேங்கிங்கில் ராம் ராமசாமி மற்றும் ஜனனி இருவரும் நிராகரிக்கப்பட்டு, நாமினேஷன் ஃப்ரீ ஸோனில் இருந்த மைனா, ஷிவின் , மணிகண்ட ராஜேஷ், தனலட்சுமி, அமுதவாணன், ராபர்ட் உள்ளிட்டோரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் சிறை சென்றனர். அதன் பின்பு மைனா மற்றும் மணிகண்டன் முன்பாக பேசிய அசீம், “ஆயிஷாவை முன்னால் வைத்துக்கொண்டே, அவளால் தலைமை பொறுப்பை எடுத்துக்க முடியாது, அவளுக்கு வீசிங் பிரச்சனை இருக்கிறது என நான் நினைத்துக்கொண்டேன்,
அதனால் நான் ரேங்கிங்கில் சண்டையிட்டேன், மற்றபடி ஆயிஷாவை எனக்கு 4 வருஷமா தெரியும், அவள் என் தங்கச்சிதான்..” என கூறி ஆயிஷாவை எழுந்து கட்டிக்கொண்டு ‘வாடி போடி’ சொன்னதற்கு மன்னிப்பு கேட்டார்.
இதேபோல், ஆயிஷாவும், “அண்ணா.. நான் தான் அண்ணா உங்களிடம் செருப்பை காட்டினேன்.. நான்தான் மன்னிப்பு கேக்கணும்.. மன்னித்து விடுங்கள்” என்றார். இதை பார்த்த மைனா நந்தினி, அடப்பாவிகளா.. இவங்க கிட்டயா இந்த பிரச்சனை பத்தி கேட்ட என மணிகண்டனை செல்லமாக அடிக்கிறார்.