Veetla Vishesham Others Page USA

ரஜினிகாந்தை சந்தித்த தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பாளர்.. இதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

AVM Productions owners meet Rajinikanth for Shivaji movie anniversary

Also Read | ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போ? தெறியான EXCLUSIVE அப்டேட்!

சிவாஜி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. ரஜினி, ஷ்ரியா, விவேக், மணிவண்ணன் என்று நட்சத்திர மட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படம் ரிலீஸ் ஆகி  15 வருடங்கள் ஆவதை முன்னிட்டு நேற்று முன்தினம் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு " இந்த மறக்கமுடியாத நாளில் நமது சிவாஜியின் பாஸ் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!" என இயக்குனர் ஷங்கர் பதிவிட்டு இருந்தார். இந்த சந்திப்பில் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதீதி ஷங்கர் உடன் இருந்தார்.

AVM Productions owners meet Rajinikanth for Shivaji movie anniversary

இந்நிலையில் சிவாஜி படத்தை தயாரித்த AVM புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சரவணன், குகன், அருணா குகன் ஆகியோர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

AVM Productions owners meet Rajinikanth for Shivaji movie anniversary

ரஜினிகாந்த்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

AVM Productions owners meet Rajinikanth for Shivaji movie anniversary

Also Read | தனுஷ் நடிக்கும் வாத்தி.. படத்துக்காக களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்! வெளியான செம மாஸ் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

AVM Productions owners meet Rajinikanth for Shivaji movie anniversary

People looking for online information on AVM Productions owners, AVM Productions owners meet Rajinikanth, Rajinikanth, Shivaji movie anniversary will find this news story useful.