Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

VIDEO: திடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலம்பரசன் TR! என்ன காரணம்! வெளியான தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் கடந்த மாதம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.

Atman Silambarasan TR hospitalized due to viral infection

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் மூன்றாம் நாள் வசூலாக 8 கோடி ரூபாயை மாநாடு படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Atman Silambarasan TR hospitalized due to viral infection

சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Atman Silambarasan TR hospitalized due to viral infection

இந்நிலையில் நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் Glimpse வீடியோ Journey of Muthu என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இச்சூழலில் சிம்பு சென்னை தனியார் மருத்துவமனையில் வைரல் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிம்புவுக்கு கொரோணா இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

VIDEO: திடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலம்பரசன் TR! என்ன காரணம்! வெளியான தகவல்..! வீடியோ

மேலும் செய்திகள்

Atman Silambarasan TR hospitalized due to viral infection

People looking for online information on மருத்துவமனையில் சிம்பு, Hospitalised, Silambarasan TR will find this news story useful.