Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

BREAKING: 6 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வரும் கேப்டன் விஜயகாந்த்? யார் படத்துல தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும்,  முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

Breaking: Captain Vijaykanth will be making a comeback

சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

Breaking: Captain Vijaykanth will be making a comeback

பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார். தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார். 

Breaking: Captain Vijaykanth will be making a comeback

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் -2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Infinity film ventures இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.  

Breaking: Captain Vijaykanth will be making a comeback

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: Captain Vijaykanth will be making a comeback

People looking for online information on மழை பிடிக்காத மனிதன், விஜயகாந்த், Salim, Vijay Anthony, Vijay Milton, Vijayakanth will find this news story useful.