MKS Others
www.garudabazaar.com

வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்! கையில் GUN-னுடன் சிம்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

GVM Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Update

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர்.

GVM Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Update

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

GVM Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Update

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்த 2-ம் கட்ட  படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக படக்குழு மும்பை சென்றது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக  ஷூட்டிங் லொக்கேஷன்களை கௌதம் மேனன் தனது குழுவினருடன் பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். 

GVM Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Update

இந்நிலையில் இந்த படத்தின் 4 ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று (07.12.2021) துவங்கியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் சிம்பு இருக்கும் புகைப்படத்தை சிம்புவே தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்குமாரை நினைவுபடுத்துவது போல் உள்ளது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GVM Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Update

People looking for online information on கௌதம் மேனன், சிம்பு, வெந்து தணிந்தது காடு, Gautham Menon, Silambarsan, Simbhu, Venthu Thaninthathu Kaadu, VTK will find this news story useful.