Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களால் வைரலாகும் GV பிரகாஷ் Tweet!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Dhanush Maaran update GV Prakash Kumar Tweet Went viral

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Dhanush Maaran update GV Prakash Kumar Tweet Went viral

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட இசை அமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும். படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியிடப்படும் என்றும் சில நாட்களுக்கு முன் ஜிவி பிரகாஷ் தெரிவித்து இருந்தார்.

Dhanush Maaran update GV Prakash Kumar Tweet Went viral

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் படத்தின் பின்னணி இசைப்பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறி உள்ளார். மேலும் ஆக்சன் நிறைந்த இசை இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Dhanush Maaran update GV Prakash Kumar Tweet Went viral

People looking for online information on Dhanush, Dhanush Maaran, GV Prakash, GVP Musical, Maaran, Malavika Mohan, Maran Update will find this news story useful.