www.garudabazaar.com

"என்ன ஒரு படம்".. லவ் டுடே படம் பார்த்துவிட்டு அட்லி போட்ட செம ட்வீட்.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். 

Atlee Tweet about Pradeep Ranganathan Love Today

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

Atlee Tweet about Pradeep Ranganathan Love Today

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன்

பிரதீப் ரங்கநாதன்" என கூறியிருந்தார்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Atlee Tweet about Pradeep Ranganathan Love Today

கடந்த வாரம் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இதனையடுத்து இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த இயக்குனர் அட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், என்ன ஒரு FUN ஆன திரைப்படம்.. மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துகள் ஏஜிஎஸ், அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதன் ப்ரோ கலக்கிட்டீங்க. ராதிகா & சத்யராஜ் சார் ❤️. யுவன் ஷங்கர் ராஜாவின் லவ்லி ஒர்க்!  படத்தின் ஒளிப்பதிவு அற்புதம்" என அட்லி ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Tweet about Pradeep Ranganathan Love Today

People looking for online information on Atlee, Love today, Pradeep Ranganathan will find this news story useful.