www.garudabazaar.com

வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மரணம்.. இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சுசீந்திரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு அவரை திரையுலகில் அறிமுகப்படுத்தய இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Suseenthiran Condolence Statement about Hari Vairavan Demise

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

Suseenthiran Condolence Statement about Hari Vairavan Demise

மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன்.  இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.

ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suseenthiran Condolence Statement about Hari Vairavan Demise

மதுரை கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

Suseenthiran Condolence Statement about Hari Vairavan Demise

இந்நிலையில் ஹரி வைரவன் மறைவுக்கு இயக்குனர் சுசீந்திரன் தனது கைப்பட எழுதிய  இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "ஆழ்ந்த இரங்கல் எங்களுடைய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த வைரவன் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது, அவரை பிரிந்து வாழும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அணைவருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suseenthiran Condolence Statement about Hari Vairavan Demise

People looking for online information on Hari vairavan, Suseenthiran will find this news story useful.