www.garudabazaar.com

திருமண நாளில் மனைவி ப்ரியா குறித்து பதிவிட்டு உருகிய அட்லி! நெகிழ்ச்சியான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது திருமண நாளை முன்னிட்டு இயக்குனர் அட்லியின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Atlee Instagram Post about His Wedding Anniversary

Also Read | GP Muthu : அஜித் படத்துல எதிர்பார்க்கலாமா..? BIGG BOSS ஜி.பி.முத்து கொடுத்த செம அப்டேட்..!😍

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பையில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 Atlee Instagram Post about His Wedding Anniversary

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

 Atlee Instagram Post about His Wedding Anniversary

சமீபத்தில் இன்று அட்லி தனது 36வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் நடிகர் விஜய், ஷாருக்கான், கீர்த்தி சுரேஷ், கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று அட்லி தனது 8வது திருமண நாளை கொண்டாடி வருகின்றார். தனது திருமண நாளில் மனைவி ப்ரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,  "இன்று எங்களின் 8வது திருமண நாள், இந்தப் பயணம் என்னை பையனாக இருந்து ஆணாக மாற்றியுள்ளது.

 Atlee Instagram Post about His Wedding Anniversary

நாங்கள் எங்கள் வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்தோம், இன்று எங்களிடம் இருக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் உன் பொறுமையும்  தர்ம நெறிமுறைகளும் தான். இவை உன்னிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. இன்னும் நீண்ட தூரம் சென்று வெற்றி பெற வேண்டும்.

அழகான நண்பராக இருப்பதற்கு நன்றி & எல்லாவற்றிற்கும்." என அட்லி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47)

Also Read | மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்'.. ரிலீஸ் எப்போ? உதயநிதி ஸ்டாலின் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Instagram Post about His Wedding Anniversary

People looking for online information on Atlee, Atlee Instagram Post, Atlee Wedding Anniversary will find this news story useful.