www.garudabazaar.com

அனல் மேலே பனித்துளி படத்தின் பாடலை வெளியிட்டு எம்.பி கனிமொழி நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் ப்ரோமோ பாடலை எம்.பி கனிமொழி வெளியிட்டிருக்கிறார்.

MP Kanimozhi release song from Anel Meley Pani Thuli movie

Also Read | GP Muthu : அஜித் படத்துல எதிர்பார்க்கலாமா..? BIGG BOSS ஜி.பி.முத்து கொடுத்த செம அப்டேட்..!😍

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அனல் மேலே பனித்துளி. இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

MP Kanimozhi release song from Anel Meley Pani Thuli movie

இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோ பாடலை நேற்று கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை உமா தேவி எழுதியுள்ளார். இதுபற்றி எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,"பெண்ணை, உடலாக, காட்சிப் பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது.  அப்படி வழமைகளை உடைக்கும் உமா தேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

"உனக்கான விடுதலை எது என்பதை நீதான் தேடிக்கண்டடைய வேண்டும்" எனும் வாசகத்துடன் துவங்கும் 'எது நான் இங்கே' எனும் இந்தப் பாடலை நடிகை ஆண்ட்ரியாவே பாடியுள்ளார். உமா தேவியின் வரிகளில் உருவான இந்த பாடல் 4.18 நிமிடங்கள் ஓடுகிறது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

Also Read | பொல்லாதவன் 15 வருட கொண்டாட்டம்.. ! பார்ட் 2 க்கு வெயிட்டிங்கா.?.. நடிகை திவ்யா வைரல் பதிவு!

 

தொடர்புடைய செய்திகள்

MP Kanimozhi release song from Anel Meley Pani Thuli movie

People looking for online information on Anel Meley Pani Thuli movie, MP Kanimozhi will find this news story useful.