Breaking: 'தளபதி 63'யின் ஷூட்டிங் அப்டேட் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துவரும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது.

Atlee and Vijay's Thalapathy 63 Next Schedule starts in Delhi May 3

கால்பந்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். 

இந்நிலையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற மே 3 ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.