கௌதம் மேனன் - தனுஷின் ENPT பட மேக்கிங் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஐசரி K.கணேஷ் வெளியிட்டிருந்தார்.

Dhanush and Gautham menon's Making Video is Out

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சசிக்குமார், சுனைனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தர்புகா சிவாவின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தது.

இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா, ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் மேக்கிங் வீடியோவை ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் - தனுஷின் ENPT பட மேக்கிங் வீடியோ இதோ வீடியோ