இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வால்மிகி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் கார்த்திக் சுப்புரஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ஜிகர்தண்டா’ படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்காக ‘வால்மீகி’ திரைப்படம் உருவாகிறது.
இப்படத்தில் மெகா ஹீரோ வருண் தேஜ் முன்னணி கதாபாத்திரத்திலும், முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் அதர்வாவும் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் காமெடி திரைப்படமான இப்படத்தின் ஷூட்டிங்கள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
14 ரீல்ஸ் பேனரில் ராம் அட்சந்தா மற்றும் கோபி அட்சந்தா தயாரிக்கும் இப்படம் வரும் செப்.6ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்கி ஜே மெயர் இசையமைக்கும் இப்படத்திற்கு அயங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் ஹரிஷ் ஷங்கர் இயக்கி வருகிறார்.
Am honoured and proud to introduce the most talented actor of our generations @Atharvaamurali in Telugu with #Valmiki thanks a lot for being in our project Sir ...🤗🤗#ValmikiOnSep6th
— Harish Shankar .S (@harish2you) June 10, 2019