www.garudabazaar.com

ஃபேஸ்புக் பழக்கம்.. ராஜ்கிரணின் வளர்ப்பு மகளுடன் திருமணமா..? - சீரியல் நடிகர் முனீஸ்ராஜா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி நாதஸ்வரம், கல்யாண வீடு ஆகிய சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. சில திரைப்படங்களிலும் நடித்த இவர், ஃபேஸ்புக் மூலம் பிரியாவுடன் பழகி, தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் அண்மையில் பரவி வந்தன.

Munish Raja explain marriage with rajkiran daughter

இந்த நிலையில், இதுபற்றி தன் மனைவியுடன் இணைந்து ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார் முனீஸ் ராஜா. அதில், “வணக்கம். நான் நடிகர் முனீஸ் ராஜா பேசுகிறேன். இவர் என் மனைவி பிரியா நாச்சியார். நாங்கள் இருவரும் காதலித்து ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி இருவீட்டு - பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு உங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

விரைவில் முறைப்படி உங்களுக்கு தகவல் சொல்கிறேன். ஆனால் எங்கள் திருமணம் தொடர்பான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி கேட்டு எங்களை தொடர்புகொண்டு வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் ஆதரவு தேவை, நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Munish Raja explain marriage with rajkiran daughter

இதனிடையே நடிகர் ராஜ்கிரண் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மகளை, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பழக்கம்.. ராஜ்கிரணின் வளர்ப்பு மகளுடன் திருமணமா..? - சீரியல் நடிகர் முனீஸ்ராஜா! வீடியோ

Munish Raja explain marriage with rajkiran daughter

People looking for online information on MuneesRaja Actor, Rajkiran, Serial Actor Munees Raja, Serial Actor Munees Raja marries Rajkiran Daughter Serial Actor Munish Raja will find this news story useful.