www.garudabazaar.com

"அந்த பெண் என் வளர்ப்பு மகள்.. இனி என் குடும்பத்துடன் சம்பந்தம் இல்லை" - ராஜ்கிரண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி நாதஸ்வரம், கல்யாண வீடு ஆகிய சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. சில திரைப்படங்களிலும் நடித்த  இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் அண்மையில் பரவி வந்தன.

girl married to munish raja is my adopted daughter Says Rajkiran

இந்த நிலையில், இதுபற்றி தன் மனைவியுடன் இணைந்து ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார் முனீஸ் ராஜா. அதில், “வணக்கம். நான் நடிகர் முனீஸ் ராஜா பேசுகிறேன். இவர் என் மனைவி பிரியா நாச்சியார். நாங்கள் இருவரும் காதலித்து ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி இருவீட்டு - பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு உங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். விரைவில் முறைப்படி உங்களுக்கு தகவல் சொல்கிறேன். ஆனால் எங்கள் திருமணம் தொடர்பான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி கேட்டு எங்களை தொடர்புகொண்டு வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் ஆதரவு தேவை, நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

girl married to munish raja is my adopted daughter Says Rajkiran

இதனிடையே நடிகர் ராஜ்கிரண் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மகளை, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.  இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,  “என் வளர்ப்பு பெண்ணிடம் எவ்வளவோ சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார். அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல,  நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.

girl married to munish raja is my adopted daughter Says Rajkiran

இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, லட்சுமி பார்வதியை பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது...” என தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்ட நடிகர் ராஜ்கிரண், “இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப்பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், என் வளர்ப்புப்பெண்ணிற்கு கணவனாகிக்கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து,  இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

girl married to munish raja is my adopted daughter Says Rajkiran

People looking for online information on Munish Raja, Priya, Rajkiran will find this news story useful.