www.garudabazaar.com

ஜித்தன்' ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் பிரம்மாண்ட கதைக் களம்!! முழு விபரம் இதோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2005ம் ஆண்டு வெளியான ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரமேஷ். ஜித்தன் படத்தின் வெற்றியின் மூலம் கிடைத்த நற்பெயரால் ஜித்தன் ரமேஷ் என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

actor producer jithan ramesh next big budget film announced

அதன் பின்னர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகாததால், தனது தந்தை ஆர் பி சௌத்ரியுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். விஜய் நடித்த “ஜில்லா”, ஆர்யா நடித்த “கடம்பன்”, ஜீவா - அருள்நிதி நடித்த “களத்தில் சந்திப்போம்” போன்ற படங்களில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.  இப்படத்தை சோழநாட்டான் இயக்குனர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இவர் 'மன்னார் வளைகுடா' படத்தை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குனர். 

actor producer jithan ramesh next big budget film announced

முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை ஜித்தன் ரமேஷின்  Must Watch நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

actor producer jithan ramesh next big budget film announced

People looking for online information on Jiiva, Jithan Ramesh, Kadamban, Kalathil Santhippom, R.B.Chowdhry, Vemal will find this news story useful.