www.garudabazaar.com

அஷோக் செல்வனின் "புதிய படத்தில்".. 3 பிரபல தென்னிந்திய ஹீரோயின்கள்.. யார் யார்னு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும் திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அசோக் செல்வனுக்கு தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படங்கள் முக்கியமான படங்களாக அமைந்தன.

Ashok selvan new movie with 3 popular south indian heroines

எனினும் ஒரு ரொமாண்டிக் டிராமா படம் சரியான முறையில் அமையாமல் இருந்தது. அந்த குறையை போக்கிய திரைப்படமாகவும் இளசுகளுக்கு பிடித்த ஹிட் படமாகவும் அமைந்தது ஓ மை கடவுளே திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வனுடன் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடித்தனர்.

மேலும், இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான தீனி திரைப்படம் அசோக் செல்வனுக்கு மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது. இந்த படத்தில் தான் அசோக் செல்வனுடன் நித்யா மேனன் மற்றும் ரீது வர்மா இருவரும் கதாநாயகிகளாக நடித்தனர்.

இந்நிலையில் வயோகாம் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் மீண்டும் இணையவுள்ளார் ரீது வர்மா. இயக்குநர் கார்த்திக் இயக்கும் இந்த படத்தில் அசோக் செல்வனுடன் ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகையான ஷிவாத்மிகா ஆகியோர்  நடிக்கின்றனர்.

அபர்ணா பாலமுரளி சூரரைப்போற்று படத்தில் பொம்மியாக தோன்றி தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தார். இதேபோல் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் தமிழ்த் திரைப்படத்தில் ஷிவாத்மிகா நடிக்கிறார்.

இதனிடையே இந்த படம் பற்றி, தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரீது வர்மா, “எனது அடுத்த தமிழ் படம். இந்த அற்புதமான படக்குழுவினருடன் பணியாற்றுவதில் சூப்பர் மகிழ்ச்சி.

இந்த பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது!!” என குறிப்பிட்டுள்ளார். ரீது வர்மா கடந்த வருடம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். 

ALSO READ: "நயன்தாராவும் நீங்களும் இருக்கும் சீக்ரெட் ஃபோட்டோ?!".. ரசிகருக்காக இன்ஸ்டாவில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

Ashok selvan new movie with 3 popular south indian heroines

People looking for online information on Aparna Balamurali, Ashok Selvan, Ritu Varma, Shivathmika Rajashekar will find this news story useful.