www.garudabazaar.com

தெ குறில் அல்ல.. தே நெடில்.. "பாட்டுக்கு பாட்டு" அப்துல் ஹமீத் இவ்ளோ கஷ்டப்பட்டாரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90களில் பிறந்தவர்களுக்கு மறக்க முடியாத நாஸ்டால்ஜியா பலவற்றிலும் முக்கியமானவர் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்று ஞாயிற்றுக்கிழமை ஆனால் சன் டிவியில் நடக்கும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியை நடத்தும் அப்துல் ஹமீத்.

90S pattukku pattu BH Abdul Hameed painful lifestory

Also Read | “லலிதாவின் ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி உருவான கதை இதுதாங்க” ― மனம் திறந்த BH அப்துல் அமீது.! Exclusive

“லலிதாவின் பாட்டுக்கு பாட்டு .. தெ என்ற இடத்தில் மணி ஒலித்து இருக்கிறது.. நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது தே நெடில் அல்ல தெ குறில்” என்று தொடங்கும் இவரது பேச்சு இன்றும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்த இவர் பல்வேறு சுவாரஸ்ய மற்றும் தமக்கு நடந்த அதிர்ச்சிகரமான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதில் தாம் வளர்ந்த சூழ்நிலை குறித்து பகிர்ந்து கொண்ட அப்துல் ஹமீத், “பிறந்து வளர்ந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள வாழ்க்கைச் சூழல்தான் இருந்தது. தேயிலைத் தோட்டத்தில், ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மக்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அன்றைய நாளில் தலைநகராக கொழும்பு இருந்தது.  அந்த பகுதியில் எல்லாமே குக்கிராமங்கள் போன்ற பகுதிகளாக இருந்தன. நான் வாழ்ந்த பகுதிகளில் உணவுக்காக ஆடு, மாடுகளை அறுத்து இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கும் பணியாற்றுவதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். அந்த பெரும் தோட்டத்தை ஒட்டி அந்தப் பணிகளை செய்யாத சில 12 குடும்பங்கள் இருந்தன. அவை குடிசை மற்றும் ஓட்டு வீடுகளாக இருந்தன. அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். என் தாய் இலங்கையைச் சேர்ந்தவர். என் தந்தை இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

90S pattukku pattu BH Abdul Hameed painful lifestory

மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்தேன். அவருடைய முகம் கூட எனக்கு தெளிவாக நினைவில்லை. நான் நிகழ்ச்சி அறிவிப்பாளராக பணி கிடைத்த ஆறு மாதத்தில் தாயையும் இழந்தேன். அந்த நாட்களில் புகைப்படம் எடுப்பது கூட ஒரு பொருட் செலவாக இருந்தது. என்னுடைய தாயின் ஒரு சிறு படம் செல்லரித்த ஒரு படம், அதை என்னுடைய நூலில் பதிவு செய்வதற்காக அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஓவியர் ஏபி ஸ்ரீதர் அவர்களிடம் கொடுத்து உயிர் ஓவியமாக வரைந்தேன். அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

மின்சார வசதி இல்லாத பகுதியில் நான் வளர்ந்தேன். அங்கு ஆண்டுக்கு ஒருமுறை அந்தோனியார் திருவிழா நடக்கும். அப்போது ஒலிபெருக்கியில் இசை பாடல்களை ஒளிபரப்பு செய்வார்கள்.  1952ஆம் ஆண்டு பராசக்தி படம் வந்து பெருவெற்றி அடைந்தது. அந்த நேரத்தில் கொலம்பியா இசை தட்டு நிறுவனம், அந்த வசனங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பார்த்து அந்த வசனங்களை இசைத் தட்டில் பதிவு செய்தார்கள். இதேபோல் மனோகரா வசனங்களையும் இசைத்தட்டில் கேட்க முடிந்தது. நடிகர் திலகத்தின் முகம் தெரியாது, நிறம் தெரியாது, ஆனால் அவர் பேசிய வசனங்களை கேட்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது.

90S pattukku pattu BH Abdul Hameed painful lifestory

அவர் பேசிய வசனங்கள் அத்தனையும் என் மனதில் நிலைத்து விட்டன.  வசனங்களை மனனம் செய்யும் திறமையே அப்போது தான் வளர்ந்தது. அதனாலேயே என்னுடைய ஆசிரியர் கலை விழாக்கள் வரும் பொழுதெல்லாம் என்னை ஒரு கதாநாயகனாக நாடகங்களில் நடிக்க வைத்தார். ஒரே கலை நிகழ்ச்சியில் ஜான்சி ராணி மற்றும் கர்ணன் என இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பேன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வரும் முன்பே நான் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து இருக்கிறேன். அப்படி என் கலை உலக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த நடிகர் திலகத்தையும் நான் நேரில் சந்திக்கும் தருணம் ஒரு சமயம் வாய்த்தது” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Also Read  | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்

தெ குறில் அல்ல.. தே நெடில்.. "பாட்டுக்கு பாட்டு" அப்துல் ஹமீத் இவ்ளோ கஷ்டப்பட்டாரா..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

90S pattukku pattu BH Abdul Hameed painful lifestory

People looking for online information on BH Abdul Hameedrumours, Pattukku pattu, Sun TV will find this news story useful.