‘டிக்கெட்டுக்கு நா எங்கடா போவேன்..!’- பிகில் குறித்து பிரபல இயக்குநர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 24, 2019 10:55 AM
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு கடும் டிக்கெட் தட்டுப்பாடு நிலவுவது குறித்து பிரபல இயக்குநர் ட்வீட் செய்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் பலரும் வருத்ததில் உள்ளனர். தீபாவளி விடுமுறை தினத்தையொட்டி இப்படம் ரிலீசாவதால் டிக்கெட் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், ‘கனா’ திரைப்பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘யாராச்சும் என்கிட்ட பிகில் டிக்கெட் கேட்டா இதான் என்னோட ரியாக்ஷன்’ என வடிவேலுவின் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிகில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘எனக்கும் சேம் ஃபீலிங்’ என ட்வீட் செய்துள்ளார்.
Same feeling 🙈🙈 https://t.co/NIceQdhfHT
— Archana Kalpathi (@archanakalpathi) October 24, 2019