தமிழ் சினிமா வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் முதல் படம் தளபதி விஜய்யின் "பிகில்"
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 10:39 AM
தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு துவங்கி முடிந்துவிட்டது. இந்நிலையை பிகில் படம் நேரடியாக ஐமேக்ஸ் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகிறது. சென்னை வடபழனியில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் முதல் முறையாக பிகில் படம் ரிலீஸ் ஆகிறது.இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.