RRR Others USA
www.garudabazaar.com

துபாயில் இணைந்த இசை மும்மூர்த்திகள்.. இணையத்தை கலக்கும் போட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துபாயில் நடந்த எக்ஸ்போ 2022 ல் தமிழ் இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ARR and YSR With SaNa.. Viral pic on Instagram

இப்பதான் Relax-ஆ இருக்கு… வைரல் ஆகும் ஏமி ஜாக்சனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி…

துபாயில் கடந்த  வருடம் அக்டோபர் மாதம் முதல் Dubai EXPO நடந்து வருகிறது.சுமார் 4.50கிமீ சுற்றளவில் துபாய் மற்றும் அபுதாபி இடையே பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. திரை பிரபலங்கள் பலர் தங்களது விடுமுறைக்காகவும் பட ப்ரோமோஷனுக்காகவும் அங்க சென்று வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர், மற்றும் இசைஞானி இளையராஜாவின் மகனும் ஆவர்.1996ஆம் வருடம் தனது பதினாறாவது வயதில் அரவிந்தன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர். தற்போதுவரை தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 2015 முதல்  U1 Records  என்னும் இசை நிறுவனமும் 2017 ம் ஆண்டிலிருந்து YSR Films என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார்.

ARR and YSR With SaNa.. Viral pic on Instagram

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் தனது திரை பயணத்தின் 25வது ஆண்டை நிறைவு செய்தார்.அத கொண்டாடும் விதமாக துபாய் EXPOவில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றார் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான “மூப்பில்லா தமிழே தாயே பாடல்” இன்று  மாஜா யூட்யூப் சேனலில் வெளியாகிறது. ஏற்கனவே  மாஜா சேனலில் சந்தோஷ் நாராயணன் இசையில் எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் தெறி ஹிட்டடித்தது தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடுத்த பாடல் வெளி ஆகிறது. தற்போது அவரும் துபாய் EXPOவில் உள்ளார்.

ARR and YSR With SaNa.. Viral pic on Instagram

சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி

இந்நிலையில் முன்னணி இசையமைப்பாளரான  சந்தோஷ் நாரயாணனும் அங்கு சென்றுள்ளார். அவர் அங்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும்  யுவன் ஷங்கர் ராஜாவை கண்டு நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.அப்போது  எடுக்கப்பட்ட அவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினை உன்னத தருணம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நம்ம கௌதமியா இது..? ட்ரெண்டாகும் கௌதமி காலெண்டர் – விண்டேஜ் pic!

தொடர்புடைய இணைப்புகள்

ARR and YSR With SaNa.. Viral pic on Instagram

People looking for online information on AR Rahman, ARR, Dubai, Santhosh Narayanan, YSR, Yuvan Shankar Raja will find this news story useful.