''திருடத் தெரியுதா ?'' - தன் பைக் திருடும் CCTV வீடியோவை வெளியிட்ட Arjun Reddy நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பெல்லி சூப்புலு' , 'அர்ஜூன் ரெட்டி' படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பிரியத்ர்ஷி. இவரது நடிப்பில் தற்போது மல்லேசம் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Arjun Reddy Fame Priyadarshi released Bike stole CCTV Video

இவரது புரோச்சேவரேவருரா திரைப்படத்தில் இவரது காமெடிக்கு திரையரங்குகளில் சிரிப்பு சத்தம் அரங்கை அதிரச் செய்கிறது. இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது பைக்கை ஒரு நபர் லாவகமாக திருடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை கூட பார்க்காமல் எப்படி பைக் திருடுறான் பாருங்க'' என்று குறிப்பிட்டுள்ளார்.