COBRA D Logo Top
www.garudabazaar.com

”GVM மேல நம்பிக்கை.. இந்த கப்பலை கரை சேர்த்திடுவார்" - VTK பட விழாவில் ARR கலகல பேச்சு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

ar rahman speech in vendhu thanidhathu kaadu audio launch

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ar rahman speech in vendhu thanidhathu kaadu audio launch

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, 02.09.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரசிகர்கள் முன்னிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

மேலும், தற்போது வெளியான படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சகட்ட லெவலுக்கும் எடுத்துச் சென்றுள்ளது. முன்னதாக, இந்த நிகழ்வின் போது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

ar rahman speech in vendhu thanidhathu kaadu audio launch

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் பகிர்ந்து கொண்டார். அப்போது, இந்த படத்தை தேர்வு செய்ததற்கான காரணம் பற்றி பேசிய அவர், GVM மீதிருந்த நம்பிக்கை தான் காரணம் என்றும், அவர் இந்த கப்பலை கரையேற்றி விடுவார் என்றும் நம்பியதாக கூறி உள்ளார். மேலும் சிம்பு நடித்துள்ளதும் தான் இந்த படத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்றும் அவர் கூறி உள்ளார்.

அதே போல, வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மறக்குமா நெஞ்சம் பாடலில் அந்த வார்த்தை அதிகம் வருவதற்கான காரணம் பற்றியும் கருத்துகளை ரஹ்மான் பகிர்ந்திருந்தார். சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்தும், வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

”GVM மேல நம்பிக்கை.. இந்த கப்பலை கரை சேர்த்திடுவார்" - VTK பட விழாவில் ARR கலகல பேச்சு.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ar rahman speech in vendhu thanidhathu kaadu audio launch

People looking for online information on AR Rahman, Gautham Vasudev Menon, Silambarasan TR, Vels Film International, Vendhu Thanindhathu Kaadu will find this news story useful.