Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"எதுவும் இங்கே சரியும் இல்ல தவறும் இல்ல".. வெளியான'விக்ரம் வேதா' தீம் பாடல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் தீம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. சிவம் இந்த பாடலை பாடியுள்ளார். மனோஜ் முந்தாஷிர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

Vikram Vedha Movie theme song Bande video out now

Also Read | குடும்பத்துடன் கொட்டும் அருவியில் சாய் பல்லவி..அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய வைரல் வீடியோ

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில்  இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

Vikram Vedha Movie theme song Bande video out now

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் & போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

Vikram Vedha Movie theme song Bande video out now

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பந்தே எனும் தீம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழில் உள்ள கருப்பு வெள்ளை பாடலின் இந்தி பதிவாக இந்த பாடல் அமைந்துள்ளது. தமிழில் உள்ள காட்சிகள் இந்தியிலும் இடம்பெற்றுள்ளன. ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகான் இடையேயான மோதல் காட்சிகள் பாடலின் அம்சமாக அமைந்துள்ளன. இந்த பாடல்  தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.

Vikram Vedha Movie theme song Bande video out now

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இந்த குடும்பத்துல கல்யாணம் ஆகுறதுக்குள்ள சிம்பு & விஷாலுக்கே கல்யாணம் ஆகிடும்".. COFFEE WITH KAADHAL TRAILER

"எதுவும் இங்கே சரியும் இல்ல தவறும் இல்ல".. வெளியான'விக்ரம் வேதா' தீம் பாடல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Vedha Movie theme song Bande video out now

People looking for online information on Bande video, Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha, Vikram Vedha Movie theme song will find this news story useful.