www.garudabazaar.com

#CobraAudioLaunch : உயிரோட சேர்த்து மனசையும் உருக வைத்த இசைப்புயல்.. வேற மாதிரி Live Performance

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் பாடல் வெளியீட்டு விழா, Phoenix Market City-ல் வைத்து நடைபெற்றது.

AR rahman live performance in cobra audio launch pics gone viral

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படத்தினை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

மேலும், இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளியான 'TrackList'

லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இன்று (11.07.2022) கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா, Phoenix Market City-ல் வைத்து நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, 'கோப்ரா' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் TRACK LIST-ஐ படக்குழு வெளியிட்டிருந்தது.

AR rahman live performance in cobra audio launch pics gone viral

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மூன்று பாடல்கள் போக  டிராக் லிஸ்ட்டில் மேலும் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தராங்கினி எனும் ஒரு பாடலை சர்தாக் கல்யாணி பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். மற்றொரு பாடலான "ஏலே இளஞ்சிங்கமே" பாடலை பா. விஜய் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார்.

AR rahman live performance in cobra audio launch pics gone viral

அசத்திய இசைப்புயல்

இது தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா அசத்தலாக நடைபெற்றது. நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், துருவ விக்ரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

AR rahman live performance in cobra audio launch pics gone viral

இந்த நிகழ்ச்சியில், படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மேடையியல் தோன்றி லைவ்வாக Performance செய்திருந்தார். இந்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கோப்ரா திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம், 11 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

AR rahman live performance in cobra audio launch pics gone viral

People looking for online information on Ajay Gnanamuthu, AR Rahman, Cobra, Cobra Audio Launch, Srinidhi Shetty, Vikram will find this news story useful.