www.garudabazaar.com

MC சாய் இசையில் "மாறு" புதிய ஆல்பம்.. பாடல் பெயர் ‘கிறுக்கன்’.. வெளியான ரிலீஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹிப் ஹாப் கலைஞர் MC சாய் உருவாக்கியுள்ள ‘மாறு’ ஆல்பம் பாடலின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

MC SAI new album titled Maaru Song titled Kirukkan

லண்டனைச் சேர்ந்த சாய் ரூபன் எனும்  MC சாய், தமிழ் ஹிப் ஹாப் உலகில் பிரபலமாக அறியப்பட கூடியவர். இவருடைய அடுத்த ஆல்பம் குறித்த புதிய தகவல் அவருடைய ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் 6 வருடங்களுக்கு முன்பாக  MC சாய் ஒரு ஆல்பம் வெளியிட்டிருந்தார்.

MC SAI new album titled Maaru Song titled Kirukkan

மேற்கத்திய தமிழ் ராப் பாடல்களின் முக்கிய முகமாக விளங்குபவரும், ‘Oru Nation’ எனும் தமிழ் ரெக்கார்டு லேபிளின் நிறுவனருமான MC சாய், தமது உண்மையுள்ள 200k இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை மேடையிலும் பொதுவெளியிலும் தமக்கே உரிய வியப்பூட்டும் திறமையால் தொடர்ந்து வசீகரப்படுத்தி வருகிறார்.

MC SAI new album titled Maaru Song titled Kirukkan

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘மாறு’ எனும் ஆல்பம் தலைப்பில், ‘கிறுக்கன் (Kirukkan)’ என பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய பாடலை தற்காலத்துக்கு ஏற்ற ட்ரெண்டியான பாடலாக MC SAI உருவாக்கியிருக்கிறார். இந்த பாடலை Germany-யை சேர்ந்த KBS Music, இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியா முழுவதுமுள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MC SAI new album titled Maaru Song titled Kirukkan

Credits:

Song title - Kirukkan

Artist - @mcsai_official

Distribution by @ajsutharsan & @kbsmusiclabel

Directed by @saanmuu_films

Label - @orunation

MC சாய் இசையில் "மாறு" புதிய ஆல்பம்.. பாடல் பெயர் ‘கிறுக்கன்’.. வெளியான ரிலீஸ் அப்டேட்..! வீடியோ

MC SAI new album titled Maaru Song titled Kirukkan

People looking for online information on Kirukkan, Maaru, MC Sai will find this news story useful.