www.garudabazaar.com

நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து மகன் துருவ் வெளியிட்ட முக்கிய அறிக்கை! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.

Actor Vikram Admitted in Alwarpet Hospital due to illness

Also Read | விக்ரம் நடிக்கும் கோப்ரா.. படக்குழு வெளியிட்ட கல்ர்ஃபுல்லான சூப்பர் ரொமான்டிக் ஸ்டில்கள்!

தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா & பொன்னியின் செல்வன் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

Actor Vikram Admitted in Alwarpet Hospital due to illness

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Actor Vikram Admitted in Alwarpet Hospital due to illness

இந்த PS1 படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். சிலநாட்களுக்கு முன் விக்ரமின் கதாபாத்திர போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது.

இது குறித்து துருவ் விக்ரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளே, அப்பாவுக்கு லேசான நெஞ்சு உபாதை இருந்தது, அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். செய்திகள் தவறாகக் கூறுவது போல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.

Actor Vikram Admitted in Alwarpet Hospital due to illness

இந்த நேரத்தில் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சியான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும் பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்." என துருவ் குறிப்பிட்டுள்ளார். 

Also Read | ஸ்ரீ ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி.. போர் பின்னணியில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து மகன் துருவ் வெளியிட்ட முக்கிய அறிக்கை! முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vikram Admitted in Alwarpet Hospital due to illness

People looking for online information on Alwarpet Hospital, Chiyaan Vikram, Dhuruv Vikram, Vikram, Vikram Admitted in Hospital will find this news story useful.