777 Charlie Trailer

குடும்பத்தோடு மாலத்தீவில் இன்பச்சுற்றுலா.. வைரலாகும் அனுஷ்கா சர்மா - விராத் கோலி ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவுடன் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Anushka Sharma Virat Kohli Maldives Vacation Photos went Viral

Also Read | யானை படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. இதான் காரணம்.. புது ரிலீஸ் தேதி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி & பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் ஏற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வழி நடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வெல்லாததால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதே காலகட்டத்தில் அடுத்தடுத்து இந்திய அணியின் டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

Anushka Sharma Virat Kohli Maldives Vacation Photos went Viral

நவம்பர் 2019 முதல் ஒரு சர்வதேச சதத்தை கூட விராத் கோலி அடிக்கவில்லை. 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 16 போட்டிகளில் 22.73 சராசரி மற்றும் 115.98 ஸ்டிரைக் ரேட்டில் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Anushka Sharma Virat Kohli Maldives Vacation Photos went Viral

இந்நிலையில் புத்துணர்வுக்காகவும், தொடர்ந்து தேக்கநிலையில் இருக்கும் கிரிக்கெட் பார்மை மீட்டெடுக்கவும் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு அனுஷ்கா ஷர்மா உடன் சுற்றுலா சென்றுள்ளார்.

மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை நடிகை அனுஷ்கா சர்மா & விராத் கோலி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.

Anushka Sharma Virat Kohli Maldives Vacation Photos went Viral

மாலத்தீவு சுற்றுலா முடிந்து இன்று காலை விராத் கோலி குடும்பத்தினர் மும்பை திரும்பினர்.

Also Read | 'நச்' கேப்சனில் மோட்டிவேஷன் கொடுத்த சமந்தா.. உடற்பயிற்சி செய்யும் வைரல் ஜிம் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Sharma Virat Kohli Maldives Vacation Photos went Viral

People looking for online information on Anushka sharma, Anushka Sharma Maldives Vacation Photos, Maldives Vacation Photos, Virat Kohli will find this news story useful.