www.garudabazaar.com

"தோனி ராஜினாமா செஞ்சப்ப... இப்பவும் ஏன் விலகுறீங்கனு தெரியும்!".. கோலி குறித்து அனுஷ்கா சர்மா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Virat Kohli: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன் விராட் கோலி வெளியேறினார்.

Anushka Sharma firstpost after Virat Kohli Resignation viral

கோலி ராஜினாமா

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் பின்புதான் இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன் விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

Anushka Sharma firstpost after Virat Kohli Resignation viral

Also Read: BiggBoss நினைவா ராஜூ எடுத்துட்டு போகும் பொருள் இதுதான்!.. ஃபீல் பண்ணி அவரே சொன்ன காரணம்!

தோனி ஓய்வெடுக்கும்போது நீங்க சொன்னீங்க..

இந்நிலையில் தான் விராட் கோலியின் மனைவியும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா, இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவு பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கடந்த 2014ல், எம்.எஸ் (தோனி) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்தார். அப்போது, நீங்கள் (கோலியை குறிப்பிட்டு) டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டீர்கள் என்று சொன்னது நியாபகம் இருக்கிறது.

Anushka Sharma firstpost after Virat Kohli Resignation viral

அந்த நாட்களில் நீங்களும் எம்.எஸ் தோனியும், நீங்களும் அரட்டை அடிப்பீர்கள். அப்போது தோனி, உனக்கும் இனி விரைவில் தாடி நரைக்க தொடங்கும் என்று ஜாலியாக கிண்டல் அடித்தபோது நாம் அனைவரும் சிரித்து களித்தோம். அப்போது முதலே, உங்களது தாடி நரைத்திருப்பதை நான் மட்டும் தினம் கவனித்துவருகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

கேப்டன் பதவியிலிருந்து ஏன் விலகுனீங்க தெரியும்...

மேலும் அந்த பதிவில் அனுஷ்கா சர்மா, “இப்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் அபார வளர்ச்சி மற்றும் உங்கள் தலைமையின் கீழான டீம் புரிந்துள்ள சாதனைகளை நினைத்து நான் பெருமை அடைகிறேன். 2014ல், கேப்டனாக பொறுப்பேற்கும்போது நீங்கள் மிகவும் இளமையுடனும் அப்பாவியாகவும் இருந்தீர்கள். உங்களுடைய  எண்ணங்கள், நன்னோக்கங்கள் உங்களை உயர்த்தியது. அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ள உத்வேகம் தந்தது.

Anushka Sharma firstpost after Virat Kohli Resignation viral

எனவே நீங்கள் என்ன செய்தாலும் அது சரியாகவே இருக்கும்.  இதுவரையிலும் நீங்கள் பேராசையுடன் எதையும் செய்யவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அப்படி நீங்கள் இப்போது இந்த கேப்டன் பதவியிலிருந்து கூட எதற்காக விலகினீர்கள் என்பதை நான் அறிவேன். நம்மை ஒரு பொறுப்பு இறுக்கி பிடித்துகொள்ளும் போது நம்மை நாமே கட்டுப்படுத்தி வைத்துக்கொள்கிறோம். இனி உங்களுக்கு எல்லை இல்லை.

இந்த 7 வருடங்களின் நீங்கள் கற்றவைகளை உங்கள் மகள் பார்ப்பாள். அனைத்தையும் நீங்கள் நன்றாகவே ஹேண்டில் செய்தீர்கள்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயன் வாழ்த்திய அந்த 3 பேர்! ... #BiggBoss5-வது சீசன் கோலகல finale கொண்டாட்டம்!

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Sharma firstpost after Virat Kohli Resignation viral

People looking for online information on Anushka sharma, Virat Kohli, Virat Kohli Resignation will find this news story useful.