www.garudabazaar.com

"கண்ணுலயே கலவரம் தெரியுதே" ஊசியோடு வந்த டாக்டர்!...‘அனுபமா’ க்யூட் ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்', படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் நடித்த முதல் படமே மெகா ஹிட்.  அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது எல்லாம் ஜாக்பாட்தான்.

Anupama takes First dose of vaccine and cute reaction

அடுத்தடுத்து  தமிழில் ‘கொடி’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது. இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ மற்றும் தெலுங்கில் ’18 பேஜெஸ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

Anupama takes First dose of vaccine and cute reaction

இதில் ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து அதர்வா, அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Anupama takes First dose of vaccine and cute reaction

இந்நிலையில், நேற்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டள்ளார். இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார். அதில் இரண்டாவது படம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Anupama takes First dose of vaccine and cute reaction

People looking for online information on Anupama Parameshwaran, Vaccine will find this news story useful.