www.garudabazaar.com

சூர்யா, ஜோதிகா ட்ரெண்டிங்!.. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் 18.9 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுடன் தற்போது வரை 38.9 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

Actor Suriya Avtress Jyothika gets their Covid19Vaccine

இந்தியாவை பொருத்தவரை மூன்று கோடி பேருக்கு மேல் கொரோனா பாதித்தது. இவர்களுள் 3.89 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனாவை எதிர்ப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தமிழகம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. தற்போதுவரை கொரோனாவுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் எளிய வழிமுறைகளாக சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, ஊரடங்கு அல்லது பொதுமுடக்கம், மாஸ்க் அணிதல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கொரோனாவை அறிவியல் பூர்வமாக எதிர்ப்பதற்கான மிகப்பெரும் ஆயுதமாக நம்மிடையே இருப்பது தடுப்பூசி தான். கொரோனா பாதித்தவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் அது தீவிர நிலைக்குச் செல்லாமல் பாதுகாக்க முடியும் என்றும், இறப்பு விகிதத்தை நாடுமுழுவதும் செலுத்தப்படும் தடுப்பூசி குறைத்து இருப்பதாகவும், இதனால் கொரோனாவும் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை இணையதளத்தில் விடுகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தற்போது சூர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சூர்யாவை பொறுத்தவரை வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக அமேசான் பிரைமில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: கங்கனா நடிக்கும் பயோபிக் படமான 'தலைவி!'.. போஸ்டருடன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Actor Suriya Avtress Jyothika gets their Covid19Vaccine

People looking for online information on Jyothika, Suriya will find this news story useful.