www.garudabazaar.com

"ப்ளீஸ் இத பண்ணாதீங்க!!... டிஆர்பி மோசமா பாதிக்குது!".. பிரபல சீரியல் ஹீரோ வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிரபல சீரியல் 'ராஜ பார்வை'. இந்த சீரியலின் ஹீரோ முன்னா, தமது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vijay tv raaja paarvai hero munna request to fan pages

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜ பார்வை' சீரியலில் பார்வை மாற்றுத் திறனாளியாக நடிக்கும் நாயகன் முன்னா. இந்த சீரியலில் தோன்றிய சில மாதங்களிலேயே இந்த சீரியலுக்கும், இவருக்குமான ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில், இவர் தற்போது தமது ரசிகர்களிடையே சில முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.

அதாவது தமது வேண்டுகோளில், சீரியல் எபிசோடுகளை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோவாக வெளியிடுபவர்கள் குறித்தும், அவ்வாறு வெளியிடப் படுவதால், சம்மந்தப் பட்ட சிரீயல்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், “ராஜ பார்வை சீரியல் ரசிகர்களுக்கும், ஃபேன் பேஜ் அட்மின்களுக்கும் என் வேண்டுகோள். சீரியல் எபிசோடின் வீடியோ க்ளிப்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடாதீர்கள். சிலர் முழு சீரியலையும் இங்கே பதிவிடுகின்றனர். இதனால் சீரியலின் டிஆர்பி மோசமாக பாதிப்புக்கு உள்ளாகிறது.

மேலும், நீங்கள் சீரியல் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்து, அவற்றின் ஸ்னாப்ஷாட்களை பதிவிடலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். புரிந்துகொள்வீர்கள். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 'பாரதி கண்ணம்மா'வில், ‘மறைந்த’ நடிகர் வெங்கட் கேரக்டரில் ‘புதிய நடிகர்!’ .. யார் தெரியுமா?..  அவருக்கும் வெங்கட்-க்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா?

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv raaja paarvai hero munna request to fan pages

People looking for online information on Munna, Raajapaarvai vijaytvserial, Trending, Vijay Television will find this news story useful.