ஜோதிகா - கார்த்தி நடிக்கும் ‘தம்பி’-க்காக கோவிந்த் வசந்தா இசையமைத்த சாங்ஸ் கேட்க ரெடியா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி, ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'தம்பி'. இந்த படத்தை 'பாபநாசம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

announcement from Karthi, Jyothika's Thambi movie songs

ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா - தம்பியாக நடித்துள்ள இந்த படத்தில் அவர்களுக்கு அப்பா, அம்மாவாக சத்யராஜ் மற்றும் சீதா நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக இந்த படத்தில் நிகிதா விமல் நடித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படம் குறித்து வெளியான அறிக்கையில், '‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த தம்பியில், நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் நடைபெற்று முடிவடைந்தது.

இந்த படத்துக்கு 96 புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், நவம்பர் 30ம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.