"அத எப்படி'ங்க Public'ல சொல்றது??.." ரசிகர் கேட்ட கேள்வி.. நடிகை 'கிருத்திகா'வின் தெறி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்சினிமா நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வரும் நடிகர், நடிகைகளுக்கும் தமிழ் குடும்பங்கள் பலரும் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

அப்படி சீரியல் நடிக்க வந்து, பல தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
மெட்டி ஒலி, செல்லமே, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து, பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார்.
பாண்டவர் இல்லம்..
தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' தொடரிலும், கடந்த 3 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இந்த தொடரில் வில்லி மற்றும் நாயகியாக மாறி மாறி நடித்து வரும் கிருத்திகாவின் கதாபாத்திரம், பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் கிருத்திகா, தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருக்க கூடியவர். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த சில விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Public'ல எப்படி கேக்குறீங்க??..
கிருத்திகாவிடம் ரசிகர் ஒருவர் மொபைல் எண்ணை கேட்க, இதற்கு பதிலளித்த கிருத்திகா அண்ணாமலை, "இந்த கேள்வியை நீங்கள் மட்டுமே கேட்கவில்லை. பல பேர் கேட்டு இருக்காங்க. அது எப்படி யாரென்று தெரியாத ஒரு பெண்ணிடம் போன் நம்பரை பொது வெளியில் கேட்கிறீர்கள்?. இதற்கு எப்படி நான் பதில் சொல்ல முடியும். இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டால், நான் அதனை நிச்சயம் தவிர்க்க தான் செய்வேன். பின்னர், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என தனியாக வந்தும் நீங்கள் மெசேஜ் செய்கிறீர்கள். இதற்கு நான் எப்படி பதிலளிப்பேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?" என தெரிவித்துள்ளார்.
அது தான் என்னோட ப்ளஸ்..
பல பிரபலங்களும் இது போன்ற கேள்வியை தவிர்க்கும் நிலையில், கிருத்திகா அதற்கு பதிலடி கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதே போல, அதிக உயரம் பற்றி ரசிகர் கேட்க, உயரம் தனது பிளஸ் பாய்ண்ட் தான் எனவும் கிருத்திகா பதிலளித்துள்ளார்.
மேலும், முதல் Crush யார் என்பது பற்றியும், ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கிருத்திகா, "ஸ்கூல் படிக்கும் நேரத்தில் எனது மாமா பையன்" என பதிலளித்துள்ளார். இது போல, அவர் அளித்த வேறு சில பதில்களும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
"அத எப்படி'ங்க PUBLIC'ல சொல்றது??.." ரசிகர் கேட்ட கேள்வி.. நடிகை 'கிருத்திகா'வின் தெறி பதில் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- "அந்த விஷயத்த நான் எப்படி Public-ஆ சொல்ல முடியும்?"... வறுத்தெடுத்த Krithika
- நடிகர் TO பைலட்.. அஜித்தை தொடர்ந்து வினய்..! வானில் வட்டமிட்ட தருணம்
- 'வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. எட்றா Flight-அ.. வானத்தில் 8 போட்ட நடிகர் வினய்'..!
- 'நாஞ்சில் சம்பத்தை சுற்றி வளைத்த பாஜகவினர்'.. கார் மீது வெறியாட்டம்..! திக் திக் நிமிடங்கள்
- 'இந்த Style போதுமா கொழந்த' Beast Director உடன் கொல மாஸ் காட்டிய ரஜினி🔥 | Thalaivar169 Update| Rajini