VIDEO : பிரமாண்ட மாஸ்டர் 'வாத்தி கம்மிங்' : தளபதிக்கு அண்ணா பல்கலை கழக மாணவர்களின் சர்ப்ரைஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் செய்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் Anna university Students Make A Tremendous Dedication To

இதுவரை மாஸ்டர் படத்தின் மூன்று பாடல்கள் வெளிவந்துள்ளன. இரண்டாவதாக ரிலீசான வாத்தி கம்மிங் பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட ஸ்டெப் மிகவும் வைரல் ஆனது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அந்த ஸ்டெப்பை போட்டு ஆடிய வீடியோ ஹிட் அடித்தது. அதன் பிறகு 6 முதல் 60 வரை பலரும் இந்த ஸ்டெப்பை போட்டு வீடியோ பதிவிடுகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ தீயாய் பரவுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் செய்திருக்கும் அந்த வீடியோ தான் இப்போ செம ட்ரெண்டிங். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து 'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். பார்ப்பதற்க்கே வேற லெவலில் இருக்கும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக..!

Entertainment sub editor