www.garudabazaar.com
iTechUS

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மலையாள நடிகை.. நடிகர் சூரி ஹோட்டலில் தடபுடலான விருந்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி.

Anna Ben visit Actor Soori Hotel and Meenakshi Amman Temple

Images are subject to © copyright to their respective owners.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Anna Ben visit Actor Soori Hotel and Meenakshi Amman Temple

தற்போது நடிகர் சூரி, கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Anna Ben visit Actor Soori Hotel and Meenakshi Amman Temple

இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கபேலா, காப்பா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் அன்னா பென்.

இந்நிலையில் நடிகை அன்னா பென், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாவணி உடுத்தி சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் படக்குழுவினர் சிலரும் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Anna Ben visit Actor Soori Hotel and Meenakshi Amman Temple

சாமி தரிசனம் செய்த பிறகு நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் நடிகை அன்னா பென் உணவருந்தினார். வெஜ் ஆம்லேட், கருப்பட்டி பணியாரம், பொடி இட்லி, கல்கண்டு பால் உள்ளிட்ட உணவுகளை உண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் சூரிக்கு நன்றி தெரிவித்தும் அன்னா பென் பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Anna Ben visit Actor Soori Hotel and Meenakshi Amman Temple

People looking for online information on Anna Ben, Meenakshi Amman Temple, Soori will find this news story useful.