www.garudabazaar.com

வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை'.. BTS புகைப்படங்களுடன் சூரி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ஷூட்டிங் குறித்த அப்டேட்டை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகிறது.

சில நாட்களுக்கு முன், ​​விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

விடுதலை படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த நட்சத்திரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்திலும் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

தற்போது விடுதலை-1 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற விடுதலை-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

இந்நிலையில் நடிகை நடிகர் சூரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோரும் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.