பிகில் பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பிரபல டிவி தொகுப்பாளினிக்கு கிடைத்த கிஃப்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 01:18 PM
தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் எமோஜியை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி VJ அஞ்சனாவிற்கு பிகில் பட தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய் ஸ்டில்ஸ் பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட், மொபைல் கவர் உள்ளிட்ட கிஃப்ட்களை வழங்கியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த VJ அஞ்சனா தயாரிப்பு நிறுவனத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Look what arrived from @agscinemas ! My #bigil goodies!! #verithanam !! Let the celebrations begin! 💃✨ thank u so much @archanakalpathi 😘 Thalapathy Deepavali! @actorvijay @Atlee_dir @Jagadishbliss pic.twitter.com/0sFAknS074
— Anjana Rangan (@AnjanaVJ) October 24, 2019