தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கின்றார். இவருடைய செய்தி வாசிப்பை பார்க்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் அனிதா சம்பத்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொரோனா குறித்து இவர் போட்ட பதிவொன்று டிரெண்டிங் ஆகி வருகிறது. அதில் “ குவளை பூவில் குழைத்த வண்ணம்.. கொரோனா நேரத்தில் போஸ்ட் செய்ய எண்ணம்..” என தெரிவித்துள்ளார். ஊதா கலரில் புடவை கட்டி அனிதா சம்பத் பதிவிட்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
Tags : Anitha sambath, Corona